கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் தனது iPhone 11 கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசிகளில் கமெரா தொழில்நுட்பத்தில் மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 12 கைப்பேசிகள் தொடர்பிலான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசி தொடர்பிலான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி iPhone 12 கைப்பேசியில் பிரதான நினைவகமாக 6GB RAM உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சாம்சுங் நிறுவனம் Galaxy S12 கைப்பேசிக்கு பதிலாக Galaxy 20 எனும் பெயருடன் 16GB RAM கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.
எனவே இவ்விரு கைப்பேசிகளுக்கும் இடையில் விற்பனையில் பலத்த போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.