இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க எத்தனையோ டயட்டுகள் வந்த வண்ணமே உள்ளது.
அதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டயட் திட்டம் தான் இந்த சர்ட்ஃபுட் டயட் திட்டம் என்பது.
இது சர்டூயின்ஸ் (sirtuins) எனப்படும் ஒரு வகை புரதங்களை செயல்படுத்த உதவுகிறது.
இந்த புரத வகை தான் பெரும்பாலும் செல்லுலார் கட்டுப்பாடு, வயதான மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும் உடல் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும், அழற்சியை குறைக்கிறது, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
சர்ட்ஃபுட் டயட் திட்டம்
சர்ட்ஃபுட் திட்டத்தை இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது
ஒன்று முதல் மூன்று நாளைக்கு உங்கள் கலோரியை ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் என்ற அளவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்களில் பச்சை காய்கறிகள் மற்றும் பழ ஜூஸ்கள், ஒரு நேர மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
முதல் மூன்று நாட்கள் இந்த உணவு முறையை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான்காவது முதல் ஏழாவது நாட்களில் பசி உங்களுக்கு குறையக் கூடும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கலோரிகளை அதிகரித்து கொள்ளுங்கள். 1000 முதல் 1500 கலோரிகள் வரை அதிகரித்து கொள்ளுங்கள்.
இரண்டாவது
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு ஆகியவை எடுத்துக் கொள்ளுங்கள்.
பச்சை காய்கறி ஜூஸ்களான செலரி, கீரைகள், க்ரீன் டீ மற்றும் பார்சிலி வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
சாப்பாடு, சிக்கன், கீரை, கறி, இறால் ப்ரை, வான்கோழி, மீன் மற்றும் பாப்பரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்படி செயற்படுகின்றது?
- இந்த சர்ட்ஃபுட் டயட் திட்டத்தின் பெரிய வேலை கொழுப்பை குறைத்து தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த டயட்டை ப்லோ செய்த 3-வது வாரத்தில் என்ன நடக்கும்.
- முதல் இரண்டு கட்டத்தை கடந்தவர்கள் தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்வது நல்லது.
- க்ரீன் ஜூஸ்கள், சர்ட்ஃபுட் உணவுகள் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். எனவே இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற முடியும்.
- ஆய்வின்படி, சர்ட்ஃபுட் டயட் திட்டத்தால் மக்கள் 7 நாட்களில் 7 பவுண்ட் எடை வரை இழந்து உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
- இந்த உணவுப் பழக்கம் மூலம் அவர்களின் ஆற்றல் அதிகரித்து உள்ளதாகவும், நல்ல தூக்கம், சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
நன்மைகள்
- இதய நோய்களின் அபாயத்தை போக்கவும், உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இறப்பு அபாயத்தை தடுக்கிறது.
- சர்ட்ஃபுட் உணவு நினைவாற்றலை மேம்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும், உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.
- இது கொழுப்புகளை இழக்க உதவுகிறது. தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இந்த டயட் உங்கள் ஆற்றலை குறைக்காமல் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.
- நாள்பட்ட நோய்களை தடுக்க உதவுகிறது.