நடிகை சினேகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். இதற்கு பின் மீண்டும் சினேகா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் அண்மையில் வளைகாப்பும் நடந்திருந்தது.
இந்த விஷயம் கேள்விப்பட்டு பிரபலங்கள்பலரும் பிரசன்னா, சினேகா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேபோல் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இதேவேளை, நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் கொண்டாடிய புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.