கன்னட திரை உலகிற்கு கிரிக் பார்ட்டி எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிக மந்தனா. பின் இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரெட் , சைலெரு நிகேவ்வரு போன்ற தெலுங்கு ஹிட் படங்களில் நடித்தன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தமிழிலும் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
மேலும் நடிகை ராஷ்மிக மந்தனா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவரது விட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர், அப்பொது ராஷ்மிக மந்தனா விட்டில் இல்லை. ராஷ்மிகவின் தந்தை அங்கு ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வருகிறார். நடிகை ராஷ்மிகவும் பிஸியாக நடித்துவருகிறார்.
எனவே இவர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து எதும் சேர்த்த்துள்ளார்களா, அல்லது வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. வருமான வரிதுறரையினர் திடீரென்று பிரபல நடிகையின் விட்டில் ரெய்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.