ட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்..

டியூசன் படிக்க வந்த 6 வயது சிறுமியை ஆசிரியையின் கணவன் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பள்ளி பணி முடிந்து வந்ததும், பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வருகிறார். இவரிடம் வீட்டின் அருகில் வசிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் டியூசன் படித்து வருகிறார்.

இந்நிலையில், குடிபோதையில் வீட்டில் இருந்த நரேஷ் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி கதறி அழுதுள்ளார்.

உடனே தங்கையின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் சகோதரனிடம் நடந்த சம்பவங்களை சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, நடந்தவற்றை பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளான். தங்களது குழந்தைக்கு நடந்த கொடூரத்தை நினைத்து, உடனடியாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அவரது மனைவியும் இதற்கு உடைந்தாயாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நரேஷும், மனைவியும் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

அதன் பின்னர் காவல்துறையினர் உறவினர் வீட்டில்ட பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணையிலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.