மத்திய கிழக்கிற்கு படையெடுக்கும் பிரான்ஸ் போர்க்கப்பல்! மேக்ரான் அதிரடி நடவடிக்கை!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் அதிரடி நடவடிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மௌசவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனவரி 17-ஆம் திகதி அன்று மேக்ரான் பதிவிட்ட டுவிட்டில், பிரான்சின் ஜாகுவார் குழு அரபு-பாரசீக வளைகுடாவிற்கு அனுப்பப்படும் என அறிவித்தார்.

இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் கூறினார்.

மேக்ரானின் இந்த நடவடிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மௌசவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரானுக்கு தெற்கே அமைந்துள்ள வளைகுடாவுக்கு ஒரே ஒரு பெயர் மட்டுமே உள்ளது என்றும் அது பெர்சியன் வளைகுடா என்பதை நான் மேக்ரானுக்கு நினைவுபடுத்துகிறேன்.

பாரசீக வளைகுடாவில் உங்கள் இராணுவ இருப்பு நீங்கள் பயன்படுத்திய பெயரை போலவே தவறானது. இரண்டு தவறுகளும் மிகப்பெரியவை, ஆனால் ஈடுசெய்யக்கூடியவை என்று மௌசவி டுவிட்டர் வயிலாக கூறியுள்ளார்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படைகள் இருப்பதால் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை அதிகரிக்கும் என்று ஈரான் பலமுறை அறிவித்துள்ளது.

பிராந்திய நாடுகளிடையெ ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நம்பிக்கை முயற்சியை தெஹ்ரான் முன்மொழிந்துள்ளது.