கையடக்க தொலைபேசிகளிற்கு அனுப்பப்படும் கோரப்படாத விளம்பர செய்திகளை நிறுத்தும் தெரிவை அனைத்து கையடக்க தொலைபேசி வலையமைப்புக்களும் வழங்க வேண்டுமென இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தலின் மூலம், நுகர்வோருக்கு இதுபோன்ற கோரப்படாத செய்திகளைப் பெறுவதை நிறுத்துவதற்கான உரிமையை வழங்கும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த விலகல் விருப்பம் இலவசமாக வழங்கப்படும்.