இந்தியன் 2ல் காஜல் அகர்வால்…. ரோல் இதுதான்…..

நடிகை காஜல் அகர்வால் அடுத்து இந்தியன் 2ல் ஒரு முக்கிய ரோலில் நடித்துவருகிறார். அவர் வயதான வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டாலும் அது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

காஜல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியன் 2 ரோல் பற்றி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் “இதுவரை நான் நடிக்காத ஒரு ரோல் இது. இது வழக்கமாக கூறுவது தானே என வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது. வேறு எதுவும் என்னால் கூறமுடியாது” என கூறியுள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு இந்த படத்தில் நெகடிவ் வேடம் என தகவல் பரவி வருகிறது.