18 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..! யாழில் நடந்த சம்பவம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தாளையடிப் பகுதியில் வீடொன்றில் இருந்து 18 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மது வரித் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

இதன் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.