இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அந்த நாட்டின் மாணவர் அமைப்பொன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
குறித்த குடியுரிமை திருத்த சட்டமானது இயற்கையிலேயே பாகுபாடு நிறைந்தது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த திருத்தச் சட்டமானது இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியமான கொள்கைகளுக்கு அழிவினை ஏற்படுத்தக்கூடியது என மாணவர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பிட்ட சில மத பிரிவினர்களை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்த சட்டம், ஏனைய மதத்தினரை நிராகரிக்கிறது எனவும், எனவே இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உத்தரவிட கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்தும் அங்கு பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்;வேறு அமைப்பினரும் குறித்த திருத்தச்சட்டத்தை எதி;ர்த்து நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.