ரஷ்யா நகரமான பெர்மில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திடீரென கொதிக்கும் நீர் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்மில் நகரில் உள்ள கேரமல் ஹோட்டலிலே இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹோட்டல் கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது.
சம்பவத்தின் போது, சுடுநீர் குழாய் வெடித்து ஹோட்டலுக்குள் கொதிக்கு நீர் புகுந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், ஹோட்டலுக்குள் இருந்து 5 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
குறைந்தது மூன்று பேர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யாத சேவைகளை வழங்கிய குற்றத்திற்காக புலனாய்வாளர்க்ள வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் செய்வதற்கும், சோதனை மேற்கொள்வதற்கும், அந்த இடத்தில் ஆதாரங்களை பாதுகாக்கும் பணியில் தடயவியல் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
#BREAKING #Libyan National Army Commander, Khalifa Haftar, refused to sign a ceasefire agreement at the #Berlin conference. https://t.co/2SnTCKg99H
— Kapil Patil (@Kapil_Patils) January 20, 2020