இந்த குணம் உங்களிடம் இருக்குதானு பாருங்க…!!

நம் ஒவ்வொருவருக்கும் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பகல், இரவு பாராமல் அயராது உழைப்போம். ஆனால் நம்மிடம் உள்ள ஒருசில தீய குணங்கள், நம் வாழ்வில் முன்னேற்றம் காண இடையூறாக இருக்கும் என்பது தெரியுமா?

குறிப்பிட்ட சில குணங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், அதை கையில் நிலைக்க விடாமல் தடுக்கும். இங்கு எந்த மாதிரியான குணங்கள் கொண்டிருப்பவர்களால் பணக்காரராக முடியாது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அக்குணங்கள் இருந்தால், உடனே அதை கைவிடுங்கள்.

பொறாமை குணம் கொண்டவர்கள்

கர்மாவின் கோட்பாட்டின் படி, பொறாமை குணம் அதிகமாக கொண்டவர்களாலும், பணத்தின் பின் யாரெல்லாம் ஓடுகிறாரோ அவர்களது கையில் பணம் நிலைக்காது. இத்தகையவர்கள் தன் மனம் முன் வந்து பெருந்தன்மையோடு மற்றவர்களுக்கு பண உதவி செய்தால் மட்டுமே, கையில் பணம் நிலைத்து, பணக்காரராக முடியும்.

போதைப் பழக்கம் உள்ளவர்கள்

இந்த வகையினர் தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் போதைப் பழக்கத்தாலேயே இழப்பார்கள். இதன் முடிவாக, வாழ்வில் மற்றவர்களுக்கு உதவ கூட முடியாமல் இருப்பர். மேலும் இந்த வகையினர் ஒருவித மாயையில் வாழ்வர். அதோடு இவர்களிடம் பணம் இருந்தாலும், சந்தோஷமாகவே இருக்க மாட்டார்கள்.

ஏமாற்றுகாரர்கள்

யார் தனது வாழ்க்கைத் துணையை ஏமாற்றுகிறாரோ, அவர்கள் தாங்களது சம்பாத்தியத்தை கள்ளக்காதலுடன் செலவழித்து, மரணத்திற்கு பின் நகரத்தில் பெருந்துயரத்தை அடைவர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 கர்வம் அல்லது திமிர் பிடித்தவர்கள்

இந்த மாதிரியான குணம் கொண்டவர்கள், எப்போதும் பணக்காரராகவே முடியாது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர்களின் பெருமை வெற்றியில் குறுக்காக நின்று, கர்வ குணத்தை காட்டும்.

மற்றவர்களுக்காக உழைப்பவர்கள்

வாழ்வில் தனக்கென்று எவ்வித குறிக்கோளும் இல்லாமல், தனிப்பட்ட வளர்ச்சி ஏதுமின்றி மற்றவர்களுக்காக உழைப்பவர்களால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது. இப்படிப்பட்டவர்கள் சாதாரண வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள்.