சென்னையில் ஸ்டைலாக முடிவெட்ட தாய் விடவில்லை என்பதால் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரையும் சிகை அலங்காரம் மிகவும் அடிமையாக்கி வைத்துள்ளது என்றே கூறலாம். புது புது ஸ்டைலில் முடிவெட்டும் மாணவர்களை ஆசிரியர்களும் தண்டித்து தான் வருகின்றனர்.
ஆனாலும் இவை தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. ஆனால் தற்போது அவ்வாறு முடிவெட்ட அனுமதிக்காததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது வேதனையை அளித்துள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகனாவின் மகன் சீனிவாசன். குன்றத்தூரில் தங்கி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் இவர் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்துள்ளார்.
எப்பொழுதும் போல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தாய், தூக்கில் தொங்கிய மகனைக் கண்டு கதறி துடித்துள்ளார்.
விசாரணையில், முடி அதிகமாக இருந்ததால் தனது ஸ்டைலில் முடிவெட்ட ஆசைப்பட்ட சீனிவாசனை தாய் கண்டித்து, சலூன் கடைக்கு அழைத்துச்சென்று தனது விருப்பப்படி முடிவெட்ட வைத்துவிட்டு வீட்டில் மகனை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.