பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கணவனே மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஊர்மிளா. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஊர்மிளா தற்போது மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த நிலையில், மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்து விடுமோ என்று சந்தேகம் அடைந்த குமார் அவர் மனைவியிடம் தொடர்ந்து சச்சரவில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த சண்டை உச்சகட்டம் அடைந்த நிலையில், குமார் தனது மனைவி ஊர்மிளாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவவத்தை நேரில் பார்த்த குமார்-ஊர்மிளா தம்பதியிரியன் மூத்த மகள் சம்பவத்தன்று நடந்த அனைத்தயும் தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையிடம் அவர் புகார் தெரிவிக்கவே,காவல்துறையினர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.