கோவிலுக்குள் அறை குறை ஆடையுடன் தொகுப்பாளினி ரம்யா.!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. டிவி நிகழ்ச்சி மட்டுமின்றி., சினிமா நிகழ்ச்சிகளையும் ரம்யா தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர்.

சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து, தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் விஜெ.ரம்யா. இவர் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது பட வெளியீடு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் ‘சங்கத்தலைவன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில், கருணாஸ், நடிகை சுனுலட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கி வருகிறார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பர்மாவில் உள்ள கோயில் ஒன்றில் அங்குள்ள வழக்கப்படி வழிபாடு நடத்துகிறார். அப்போது அவர் பேண்ட் எதுவும் அணியாமல், தொடை முழுவதும் தெரியும்படி சென்றுள்ளார். இதைபார்த்த நெட்டிசன்கள், மேடம் பேண்ட் போட மறந்துட்டீங்க என கிண்டல் செய்து வருகின்றனர்.