அறிமுகமாகின்றது Galaxy Fold 2..!!

சாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய Galaxy Fold கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இக் கைப்பேசியானது அதிக வரவேற்பினைப் பெற்றிருந்தபோதிலும் விலையும் அதிகமாகவே காணப்பட்டது.

இந்நிலையில் Galaxy Fold 2 எனும் மடிக்கக்கூடிய புதிய கைப்பேசியினை இன்றைய தினம் அறிமுகம் செய்கின்றது சாம்சுங் நிறுவனம்.

முதன் முறையாக பிரேஸிலில் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது.

Qualcomm Snapdragon 855 mobile processor, பிரதான நினைவகமாக 12GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியின் திரையானது 7.3 அங்குலம் உடையதாகவும், AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இதன் விலையானது 3,107 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.