இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கலால் நாளுக்கு நாள் அவதிப்படுவதுண்டு.
போதிய நீர் உட்கொள்ளமால் இருப்பது, உணவில் போதிய நார்ச்சத்து சேர்க்காமல் இருப்பது, துரித உணவு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் குடல் செயல்பாட்டில் கோளாறு ஏற்படுகிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது.
இந்த பிரச்சினையால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் தவிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் அது கேடு விளைவிக்கும்.
இது நாளுக்கு நாள் மிகவும் சங்கடத்தை கொடுக்கும். எனவே மலச்சிக்கலில் இருந்து விடுபட சில உணவுகளை உட்கொண்டோலே போதும்.
அந்தவகையில் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்ற இங்கு பார்ப்போம்.
- மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவை குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகின்றன மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
- தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்கள். மலச்சிக்கலை போக்குவது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
- ஸ்ட்ராபெர்ரிகளை விட இருமடங்கு நார்ச்சத்து கொண்டிருப்பதால், ராஸ்பெர்ரி உங்கள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது செரிமான அமைப்பு மூலம் உணவு சீராக செல்ல உதவுகிறது. மேம்பட்ட செரிமானத்தை எளிதாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பெர்ரி உதவுகிறது.
- கிவி சிறந்த மலமிளக்கியாகும். உங்கள் மலச்சிக்கலை போக்க கிவி பழம் உதவும்.
- பெக்டின் நார்ச்சத்து நிரம்பிய, ஆப்பிள்களை உட்கொள்வது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
- அத்திப்பழம் குடல்களை வளர்க்கிறது மற்றும் தொனிக்கிறது மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே உலர்ந்த அத்திப்பழங்களை உங்கள் காலை உணவில் சேர்க்கலாம்.
- மலச்சிக்கல் நிவாரணத்திற்கு கொடிமுந்திரி சாறையும் பருகலாம். ஏனெனில் இதில் செல்லுலோஸ் போன்ற கரையாத நார்ச்சத்து உள்ளது. இது மலத்தில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கிறது. மேலும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- நார்ச்சத்து நிறைந்த, பேரிக்காய் பழம் மலச்சிக்கலை எளிதாக்க உதவும். மலச்சிக்கலை வேகமாக போக்க பேரிக்காய் சாறு அருந்தலாம்.
- இரவு உணவிற்கு முன் ஒவ்வொரு நாளும் மாலையில் அரை கப் விளாம் பழ கூழ் மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சாப்பிடுவது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
- நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கலை தீர்க்கிறது. மேலும், குடல் இயக்கங்களைத் தூண்டுகிறது.
- நிறைய தண்ணீர் குடிப்பது, வழக்கமான உடற்பயிற்சி, யோகா, மன அழுத்தத்தை குறைக்க தியானம் போன்ற பல்வேறு வீட்டு வைத்தியங்கள் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.