உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.
இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை அல்லது புற்று நோய் எனப்படுகின்றது.
புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இருப்பினும் இதற்கான அறிகுறியை தெரிந்து கொண்டாலே போதும் புற்றுநோயில் இருந்து எளிதில் விடுபட முடியும்.
அந்தவகையில் தற்போது இதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- மரு, மச்சம் இவற்றில் நிற, உரு மாற்றம் இருந்தால்
- அடிக்கடி (அல்லது) தொடர்ந்து வயிற்று வலி இருந்தால்
- அடிக்கடி வயிறு உப்பிசம்
- தொடர்ந்து தலைவலி
- வார்த்தைகளை உருவாக்குவதில் சிரமம்
- முறையற்ற ரத்தப் போக்கு பெண் பிறப்புறுப்பிலிருந்து
- ஆண் பிறப்புறுப்பில் வலியற்ற கட்டி
- அதிக சோர்வு, பலமின்மை
- நீண்ட கால இருமல்
- 3 வாரங்களுக்கு மேல் இருந்தாலே அது நீண்ட காலம்தான்
- புதிதாக நகத்தில் கறுப்பு
- சிறுநீரில் ரத்தம்
- மாறுபட்ட நேரங்களில் கழிவுப் பொருள் வெளியேற்றம்
- கண் பார்வையில் திடீரென கோளாறு
- மூச்சு வாங்குதல்
- முயற்சி எடுக்காமலேயே எடை குறைதல்
- பசியின்மை
- தொடர்ந்து தொண்டை பாதிப்பு
- குரலில் மாற்றம்
- தீராத முதுகு வலி
- மார்பகத்திலிருந்து கசிவு
- அடிக்கடி ஜுரம்
- வாயில் தொடர்ந்து ஆறாத புண்
- விழுங்குவதில் கடினம்