பொதுவாக உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு முகத்தில் கீழ் அசிங்கமாக கொழுப்பு சேருவதுண்டு.
குறிப்பாக தாடைக்கு கீழ் பகுதியிலும், கழுத்திலும் கொழுப்பு சேர்ந்திருக்கும்
இது சிலருக்கு இது மரபணு காரணமாகவும் இவ்வாறு உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
இதனை எளிய முறையில் போக்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.
- முதலில் உணவில் சேர்க்கும் அதிகப்படியான கலோரிகளை குறைக்க வேண்டும். இதை சரியாக பின்பற்றினால் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கொழுப்பை குறைத்து விடலாம்.
- சிறிது நேரம் சூயிங்கம் மெல்லுவது என்பது உங்கள் தாடைக்கும், வாயிக்கும் ஓர் பயிற்சியாக இருக்கிறது. இதனால், தாடையின் கீழ் பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் கொழுப்பை குறைக்க இது உதவும். மேலும் இது தாடை தசையின் வலுவை அதிகரிக்கும்.
- முகத்தில் சேரும் கொழுப்பை குறைக்க மற்றும் முகத் தசைகளை வலுமையாக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. இவை கழுத்து மற்றும் தாடையின் கீழ் பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்க பெருமளவு உதவுகிறது.
- தினமும் சீரான இடைவேளையில் மூன்று லிட்டர் நீர் பருகுவதை பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இரவு உறங்கும் போது பெரிய அளவிலான தலையணையை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் உறங்கும் போது தலையணை இன்றி உறங்குவது பல உடலநல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். முக்கியமாக முதுகு, கழுத்து, இடுப்பு வலையை போக்கும்.
- யோகாவில் சில ஆசனங்கள் கழுத்து, கன்னம், தாடை போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்பை குறைக்க பயனளிக்கின்றன.