நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் படத்தில் தமிழ் திரைத்துறையில் ரசிகர்களுக்கு அறிமுகமானார், பின்னர் ஷாஜகான், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, குசேலன், ரௌத்ரம், கோ ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த சோனாவுக்கு சமீபகாலமாகப் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி படத்தை தயாரித்த அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. பின்னர், சினிமாவை விடுத்தது, செயற்கை வைர நகை வியாபாரத்தில் இறங்கினார். ஆனால் அதில் அவர் இன்னும் நஷ்டத்தில் தான் சென்றார். தற்போது தமிழ் படங்களிலும் கட்டாகி வரும் அவர், திரிஷா நடித்துள்ள பரமபத விளையாட்டு, வரலட்சுமியின் சேசிங் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது அவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேட்டகிறார்கள். நான் இந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளேன். 12 படங்களை வேண்டாம் என நிராகரித்துள்ளேன்.
நிம்மதியை தேடி பயணிக்கிறேன். முன்பை போல் இல்லாமல் முதிர்ச்சியான மனநிலை ஏற்பட்டுள்ளது. பணத்திற்காக ஓட வேண்டிய அவசியம் இல்லை. குடிப்பதை கூட நிறுத்திவிட்டேன். 2020 ஆண்டு எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மலையாளத்தில் பச்ச மாங்கா என்ற படத்தில் நடிகர் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படத்தை மலையான இயக்குனர் ஜெயேஷ் மைனாகபாலி இயக்குகிறார். ஆக்ஷன், கிளாமர், சென்டிமென்ட், அந்தரங்க காட்சிகள் என உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.