தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மாட்டிஹதியில் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.
கருப்பன் படத்திற்கு முன்பே தான்யா பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் கருப்பன் திரைப்படம் தான்யாவுக்கு அடையாளத்தை கொடுத்தது.
இவரது உண்மையான பெயர் அபிராமி, இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்று தனது பெயரை மாற்றி கொண்டு சினிமாவிற்கு வந்தார்.
கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். தற்போது நடிகை தன்யா,சிபிராஜுக்கு ஜோடியாக ‘மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வேற லெவல் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அனைவரின் போனும் வெடிக்க போகுது அந்த அளவிற்கு ஹாட்டாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்திருக்கிறார். இன்னும் சிலரை அக்கா இப்படிலாம் டிரஸ் போடாதீங்க என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.