தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா பெரிய பெண் போல போஸ் கொடுத்து அந்த படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், அனிகாவிற்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அண்ணனுடன் அனிகா இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.