பொதுவாக சிலருக்கு அசிங்கமாக மூக்கின் மேல் கரும்புள்ளிகள் தென்படுவதுண்டு. இது முகத்தின அழகை மொத்தமாகவே கெடுத்து விடுகின்றது.
கரும்புள்ளி பிரச்சனையானது எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் இருக்கும்.
முகத்தில் தங்கியிருக்கும் கிருமிகள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படுகிறது.
அதிலும் சருமத்துளைகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வெளியேறாமல் அடைக்கப்படும் போது ஏற்படும்.
இந்த கரும்புள்ளிகளை அகற்றுவது மிகவும் எளிதாகும்.
அந்தவகையில் கரும்புள்ளிகளை இயற்கை முறையில் அகற்ற என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் இவற்றை பேஸ்ட் போல் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் செய்து இரவில் பூசி காலையில் மிதமான சூடு உள்ள நீரில் கழுவி விடவும்.
- ஒட்ஸ் பொடி 1 டேபிள் ஸ்பூன், சம அளவு தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- கிறீன் டீ இலையை நீரில் கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால் மென்மை தன்மை அதிகரிக்கும்.
- 1 டேபிள் ஸ்பூன் உப்பை அரை கப் நீரில் கலந்து கரைந்த பின் கடலை மாவுடன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.