11 இளைஞர்களை கடத்தி செல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் சந்தேகநபர்கள் 13 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
2008 மற்றும் 2009காலப் பகுதியில் கொழும்பில் வைத்து 11 இளைஞர்களை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்ததாக முன்னாள் கடற்பதைளபதி மற்றும் 13 பேர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சாட்டியிருந்தது.
ம்ேலும் இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வருட இறுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 124 வது பிரிவின்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வசந்த கரன்னாகொடவிடம் விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.