முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான துசித்த திலும்குமார இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க இன்று இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக வழக்கு விசாரணைக்கு அழைப்பு விடுத்து மன்றில் ஆஜராகிய சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக பணிபுரிந்த குறித்த சந்தேகநபர் மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறைக்கு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக உரிய உத்தரவை பிறப்பிப்பதாக மேலதிக நீதவான் அறிவித்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.