இலங்கையின் வரலாற்றில் ஒரு கிலோ தக்காளி 400 ரூபாவை கடந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளவிய ரீதியிலுள்ள மரக்கறி சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தக்காளியின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தக்காளி மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன்காரணமாக தக்காளியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பதுளை, வெலிமடை, எட்டம்பிட்டிய, ஹாலிஎல மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேச விவசாயிகள் தக்காளியை தொகை தொகையாக அழித்துள்ளனர்.
எனினும் கடந்த 3 மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக தக்காளி உட்பட மரக்கறிகள் அழிவடைந்துள்ளமையினால் அனைத்து மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.
தற்போதைய நிலையில் தக்காளி உற்பத்தி செய்த விவசாயிகள் பெரும் லாபம் அடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து மரக்கறி சந்தைகளில் மரக்கறி விலைகள் குறைவடைந்துள்ளதாகவும், அதன் பயன்கள் மக்களுக்கு கிடைக்கிறதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது