மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையம் பிரதான வீதியில் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.00 மணியளவில் கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் அதன் எதிர்த்திசையில் துவிச்சக்கரவண்டியில் வந்த மீன் வியாபாரியின் மீது நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மீன் வியாபரியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
மோட்டார் சைக்கிளோட்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையே விபத்திற்கான காரணம் என தெரியவருகிறது.
களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.