நடிகை ராதிகா கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கௌசல்யாவிடம் கேட்ட ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வி என்ன தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாயை வென்று சாதனை படைத்தார் மாற்றுத்திறனாளி பெண்ணான கௌசல்யா.

சைகை மூலமே பதிலளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கௌசல்யா மதுரை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

15 கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தை பரிசைத் தட்டிச் சென்ற கௌசல்யா, இந்த குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

இந்நிலையில் கடைசியாக கேட்கப்பட்ட கேள்வியை டுவிட்டரில் டிவி நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

அதில், மன்னர் இரண்டாம் புலிகேசியின் கற்பனை இரட்டைச் சகோதரனான நாகநந்தி எனும் கதாபாத்திரம் 1948-ன் எந்த வரலாற்று நாவலில் தோன்றுகிறது என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், சிவகாமியின் சபதம் மற்றும் யவன ராணி என நான்கு தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதற்கு சிவகாமியின் சபதம் என சரியான விடையளித்து ஒரு கோடியை வென்ற முதல் கோடீஸ்வரி என்று ராதிகா அறிவிக்கிறார்.

தான் வென்ற பணத்தை நாகர்கோவிலில் அமைந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கு அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ள கௌசல்யாவுக்கு, குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக பணிபுரிய வேண்டும் என்பதே ஆசையாம்.