ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பமீலா ஆண்டர்சன், இவர் பேவாட்ச் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இசைக் கலைஞரான டோமி லீ என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் மூன்று வருடம் சேர்ந்து வாழ்ந்த நடிகை பமீலா ஆண்டர்சன் அவரிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
இதையடுத்து 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். அவருடன் ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தவர் 2007-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
இதற்கடுத்து விளையாட்டு வீரர் ரிக் சாலமனை இரண்டாவது திருமணம் விவகாரத்து ஆன அதே ஆண்டே திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே அவரிடம் இருந்து விவகாரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து மீண்டும் 2014-ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணமும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. பின் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதற்கிடையே பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) என்பவரை பமீலா ஆண்டர்சன் ‘காதலித்து வந்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் அவரை முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் ஜான் பீட்டர்-பமீலா ஆண்டர்சன் திருமணம் கடந்த திங்கட்கிழமை எளிமையாக நடைபெற்றது. நடிகை பமீலாவும் தயாரிப்பாளர் ஜான் பீட்டரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர். அந்த 30 டேட்டிங்க்கு பிறகு இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனஅவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திருமணம் பற்றி பமீலா ஆண்டர்சன் கூறியாதவது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என தெரிவித்துள்ளார்.