சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வு..!!

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கம் மேலும் பரவும் என்று சீனா எச்சரித்துள்ளது.

சீனா மற்றும் ஹாங்காங்கில் 2002ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை சார்ஸ் என்ற நோய் தாக்கி சுமார் 650 பேர் உயிரிழந்தனர். தற்போது அதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. இதனால் சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் இருந்து மற்றொரு மனிதருக்கு வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, தாய்லாந்து, தைவான், ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பு அவசரக்கூட்டம் நடத்த உள்ளது. இந்த நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் உள்ளதாக சீன சுகாதார ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து பரவி இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.