சனிப்பெயர்ச்சி இன்றா அல்லது வரும் டிசம்பர் 27ம் தேதியோ என்பதில் சோதிடர்களிடையே குழப்பம்

2020 ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி இன்றா அல்லது வரும் டிசம்பர் 27ம் தேதியோ என்பதில் சோதிடர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி கிடையாது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதனால் இன்று பக்தர்களிடையே பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏனெனில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்றும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 27ம் தேதியும் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நாகை மாவட்டம் திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி என வெளியாகிய செய்தி முற்றிலும் தவறானது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிசம்பரில் தான் சனீஸ்வர பகவான் தனுச ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என்றும் ஆகவே சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாமென எனவும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன்படி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் டிசம்பர் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்