இனிமையான பீட்ரூட் தொக்கு செய்வது எப்படி ??

ப்பாத்தி, பூரி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள ருசியான சைடிஷ் தான் தொக்கு. இப்பொழுது இந்த தொக்கு வகையில் பீட்ரூட் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 5
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்

செய்முறை : 

முதலில், பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோல் சீவி, துருவிக் கொள்ளவும். பிறகு வெந்தயம், பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து, அதில் பீட்ரூட் துருவலைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பீட்ரூட் வேகும் வரை சிறு தீயில் வைத்து கிளற வேண்டும்.

பின்னர் எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், வறுத்து அரைத்தப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கிளறி இறக்கினால் ருசியான பீட்ரூட் தொக்கு தயார்.