கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா .இவர் இந்தாண்டு வெளியான விஸ்வாசம், பிகில் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் வெளியாகி நல்ல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘தர்பார்’ திரைப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளது.
படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் நயன்தாரா தனது காதலருடன் நேரம் செலவிடுவதை தவிர்ப்பதில்லை. ஆம் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பேசப்படும் காதல் ஜோடி என்றே கூறலாம். இருவரும் இணைந்து தங்களின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு போட்டொ பதிவிட்டு வாழ்த்து கூறுவது வழக்கம்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது காதலர்கள். அவர்கள் முதலில் சந்தித்தது நானும் ரௌடி தான் படத்தின் மூலம் தான் முதலில் சந்தித்துக்கொண்டனர்.
இப்படத்தின் வாய்ப்பு முதலில் நடிகை அமலா பாலுக்கு தான் வந்திருக்கிறது. ஆனால் அமலா பால் அப்போது அவரது திருமண வேலையில் பிஸியாக இருந்ததால் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு தான் நயன்தாராவை சந்தித்து விக்னேஷ் சிவன் கதை கூறினார். அவர்கள் காதலும் துவங்கியது. இந்த விஷயத்தை அமலா பால் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.