பெங்களூரு மாநிலத்தில் உள்ள DJ ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் இந்த ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவியின் முன்னாள் கணவனை குத்தி கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:- டசிப் என்னும் ஆட்டோ ட்ரைவர் ஒருவர் மனைவி ஏற்கனவே இர்பான் என்னும் நபரை திருமணம் செய்துகொண்டு பின் சிலகாலம் அவரோடு வாழந்தார். அதன் பின்பு அவரை பிரிந்து இரண்டாவது கணவனான ஆட்டோ ட்ரைவரோடு வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், மனைவியை பிரிந்து வாழ முடியாத முதல் கணவர் இர்பான், அந்த பெண்ணிடம் அடிக்கடி வந்து தகராறு செய்து தன்னோடு வந்து வாழும்படி கலாட்டா செய்து வன்முறையில் ஈடுபட்டு வந்தார். இந்த சம்பவம் நடந்த அன்றும் மீண்டும் அவர் கலாட்டா செய்திருக்கிறார்.
இதனை, பொறுக்க முடியாமல் இரண்டாவது கணவன் டசிப் முதல் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து கொலை செய்த ஆட்டோ ட்ரைவர் டசிப்பை கைது செய்து, போலீசார் விசாரணை செய்து வருகிறார்.