கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நபரின் பெயர் ஏ.எம்.நாயர் என்கிற ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர். இவர் ஜப்பான் நாட்டில் உள்ள கியாட்டோ நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பிற நாடுகளில் ஆதரவு திரட்டிய நபரும் ஆவார்.
இதனைப்போன்று இந்திய தேசிய இராணுவத்திற்கும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும் உதவியாகவும் இருந்து வந்தார். இவரை அப்பகுதியில் இருந்த ஜப்பான் மக்கள் நாயர் ஸான் என்று அன்போடு அழைத்து வந்தனர்.
இவரது வாழ்க்கையினை தற்போது திரைப்படமாக எடுக்க கடந்த 2009 ஆம் வருடத்தில் திட்டம் தீட்டியிருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இருப்பினும் இந்த திரைப்படம் தீடீரென கைவிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்திற்கான பிற பணிகள் துவங்கியுள்ளது. இந்த படத்தில் மோகன்லால் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்திற்கு நாயர் சான் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் ஆல்பர்ட் ஆண்டனி இயக்கவுள்ளார். தற்போது நடிகர் மோகன் லால் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் முடிவிற்கு பின்னர் நாயர் ஸான் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் ரூ.400 கோடி செலவில் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.