முதலுதவி செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளும், பொறுப்புகளும்
முதல் உதவி செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:-
1. முதலில் உயிரை பாதுகாக்க வேண்டும். இது தான் முதல் உதவியின் முக்கிய நோக்கமாகும்.
2. நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. ஆபத்தில் உள்ளவர்களை தைரியம் சொல்லி தேற்றுபவர்களாக இருக்க வேண்டும். அதை விட துணிச்சல் இருத்தல் அவசியம்.
5. பாதிப்பின் தன்மையை சரியாக கணித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
6. மருத்துவ உதவி கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
பொதுவாக முதல் உதவியை எப்படிச் செய்வது?
CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.