விஜய்யை நான் அடிக்க மாட்டேன், வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய்.

இவர் முன்னணி நட்ச்சத்திரங்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி, விஜயகாந்த், மோகன்லால், ராஜ்கிரண் போன்றவர்களோடு இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் “காவலன் படத்தில் விஜய் அவர்களை அடிப்பது போல் ஒரு காட்சி இருக்கும். நான் விஜய்யை நடிக்கமாட்டேன் என்று இயக்குனரிடம் முடிவாக தெரிவித்துவிட்டேன்” என்று கூறினார்.

மேலும் பேசிய இவர் “இதன்பின் விஜய் அவர்கள் வந்து என்னிடம் எடுத்து கூறி இது படம்தானே என்று கூறிய பிறகு தான் நான் அந்த காட்சியில் நடிக்க துவங்கினேன்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.