நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது.
இந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது.
சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனால் அதை விட சிறந்தது தான் சீரக தண்ணீரை பருகுவது ஆகும்.
தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
எதையும் அளவாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிக அதிகமாக பயன்படுத்தினால் அதிக ஆரோக்கியம் கிடைக்காது. மாறாக ஆபத்து தான் உண்டாகும்.
தப்பிதவறி கூட சீரகத்தை அதிகமாக சாப்பிடாதீர்கள்
கேரளாவில் அதிகப்படியானோர் சீரக தண்ணீரை அதிகமாக குடிப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் உடல் நோய்களுக்காக சீரகம் சாப்பிடும் போது கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை படி தான் சீரகம் சாப்பிட வேண்டும்.
மேலும் சிலர் சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மென்று கொண்டு இருப்பார்கள் இது முற்றிலும் தவறான ஒரு முறையாகும். இதில் உள்ள காரத்தன்மை மிகப்பெரிய தீங்கை விளைவிக்ககூடியதாகும்.
அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.
அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், அளவாக பயன்படுத்துவதும் நல்லது.
அதிகமாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். சீரகத்தில் இருக்கும் எண்ணெய் எளிதில் அதிக அளவில் ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
சீரகத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், கர்ப்பினி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது.
குறை பிரசவம் உண்டாவதற்கு கூட இது காரணமாக உள்ளது. தினமும் அதிகமாக சீரகம் சாப்பிடுவதால், வயிற்று உப்பசம் ஏற்படும் அதுமட்டுமின்றி குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
சீரகம் சக்கரையின் அளவை இரத்ததில் குறைப்பதற்கு உதவுகிறது. எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.