சென்னையில் உள்ள ஆவடி மகளிர் காவல் நிலையத்திற்கு குழந்தைகள் அவசர புகார் அழைப்பில் சிறுமியொருவர் பேசியுள்ளார். அவர் தனக்கு 16 வயது ஆகிறது, எனது தந்தையால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் முகவரியை பெற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில் சிறுமியின் தந்தை இல்லத்தில் இல்லை.
சிறுமியின் தந்தையை வரவழைக்க, சிறுமியின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, நாமக்கல்லுக்கு சென்ற நபரை மீண்டும் வரவழைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆவடி பேருந்து நிலையத்தில் வைத்து சிறுமியின் தந்தையை கைது செய்த பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளான்.
இதனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பணிக்கு செல்லாது இருந்து வந்துள்ளான். குடும்பத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று எண்ணி சிறுமியின் தாயார் பணிக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னை சித்தர் என்று கூறிக்கொண்டு 6 மாதத்திற்கு ஒருமுறை நாமக்கல்லில் இருக்கும் கொல்லிமலைக்கு சென்று வரும் நிலையில், தனது ஆயுளை பலப்படுத்த வேண்டும் என்று கூறி 16 வயதாகும் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் கொடூரனின் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.