உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அதனுடன் தொடர்பு பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 61பேரின் விளக்கமறியல் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபர்களில் இருவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவிலுள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மொத்தமாகக் கைது செய்யப்பட்ட 64 பேரில் ஏற்கனவே மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.