இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கிய SP ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதி ,ஸ்ருதி ஹாசன், சாய் தன்ஷிகா, கலையரசன், மற்றும் பலரை வைத்து லாபம் என்னும் படத்தை இயக்கி வருகிறார். விவசாயிகளின் கஷ்டத்தை எடுத்துரைக்கும் விதமாக உருவான இந்த படம் தற்போது இறுதிக்கட்டப் பனியின் ஈடுபட்டு வருகிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘லாபம்’. இவருடைய பிறந்தநாளான இன்று படக்குழு இவர் பாடிய ஒரு ரொமான்டிக் பாடலின் முன்னூட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவிற்கு தன்னுடைய தந்தையான உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.