கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கலியை கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பருத்துறை வீதியில் உள்ள கல்வியங்காடு பகுதியில் இலங்கநாயகி அம்மன் ஆலயம் முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலியே இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கு நிலையில்,
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கல்வியங்காடு செங்குந்தா பாடசாலை வீதிக்கு முன்னால் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என இலங்கை பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.