இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 12 மணி நேரத்தில் சீனாவின் குங்மிங், ஷெங்காய், பீஜீங் மற்றும் சோங்கிங விமான நிலையங்களில் இருந்து கட்டுநாயக்க விமானத்திற்கு 7 விமானங்கள் வந்துள்ளன.
இந்த விமானங்களில் இலங்கைக்கு வந்த எந்த பயணிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை. சீனாவின் குங்மிங் விமான நிலையத்தில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் இலங்கை மாணவர்கள் 65 பேர் வந்துள்ளனர்.
இவர்களை பரிசோதித்த விமான நிலைய மருத்துவப் பிரிவின் மருத்துவர்கள் அவர்களுக்கு வைரஸ் தொற்றியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், அவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் பணியாற்றும் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு வருகின்றனர். அனைவரும் முகமூடிகளை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.