பெண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதி போன்ற இடங்களில் ஏற்படும் அசிங்மான தழும்பை எளிதில் போக்க வேண்டுமா?

பொதுவாக சில பெண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதி போன்ற இடங்களில் அசிங்மான தழும்பை ஏற்படுத்துகின்றது.

இதற்கு சரியான உள்ளாடைகளை தேர்வு செய்வதன் மூலம் அதை அணியும்போது அல்லது அணிந்து கழட்டியபின் உங்கள் உடம்பில் கடும் தழும்புகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.

அதுமட்டுமின்றி சில இயற்கை பொருட்களை வைத்தும் இந்த தழும்பை போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • இறுக்கமான ஸ்ட்ராப்களை சற்று தளர்த்தி அது உங்கள் உடம்பில் பள்ளங்களை ஏற்படுத்தி தழும்பை உருவாக்காமல் இருக்குமாறு செய்யுங்கள்.
  • உள்ளாடையின் எலாஸ்டிக் எங்கெல்லாம் அழுத்தம் தருகிறதோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுங்கள். இது உங்கள் உடம்பில் அழுத்தம் உள்ள இடங்கள் ஈரப்பதத்துடன் இருக்கவும் அங்கு சருமம் பாதிக்கப் படாமலிருக்கவும் உதவும்.
  • உள்ளாடையின் உராய்வினாலும் அசைவினாலும் பாதிக்கப்பட்ட இடம் கருமையாகவோ அல்லது சிவந்தோ போய்விட வாய்ப்புண்டு. அங்கு இறந்த சரும செல்களில் சேர்க்கை அதிகமாக இருக்கும். இதற்கு முதலில் இறந்த செல்களை அகற்றி அங்கு ஈரப்பதத்தை தக்கவைக்க தேவையான மாயிஸ்சரைசர் அல்லது ஈரப்பதம் தரும் ஏதாவது ஒன்றை தடவவேண்டும்.
  • கற்றாழை ஜெல்லை சிறிது தடவினால் அது தழும்பு மற்று உராய்வினால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும்.
  • ஐஸ் பேக் ஒத்தடம் கொடுப்பது சிறந்தது. ஏனெனில் இது அசௌகரியம் மற்றும் வலிக்கு இந்த நிவாரணம் அளிக்கும்.
  • மஞ்சளை அரைத்து உள்ளாடை எலாஸ்டிக் அழுத்தத்தினால் நிறம் மாறிய இடங்களில் தடவுங்கள். இது நிறம் மாறிய சருமத்தை வெண்மையாக்கவும் தழும்புகளை படிப்படியாக குணமாக்கி ஆறுதல் அளிக்கவும் செய்யும்.