பொதுவாக சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது போல மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
இது குறிப்பாக சில உணவுகளை சாப்பிடுவதனால் கூட ஏற்படுகின்றது என கூறப்படுகின்றது.
ஆனால் இதற்கு மருத்துவர்கள் மாத்திரைகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் பொதுவாக பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் இந்த மாதிரியான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதனை தவிர்த்து இதற்கு இயற்கையான வழியிலே எளிதில் தீர்வு காண முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தில் ஆல்கஹால் மற்றும் காஃபைன் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பானங்களுக்கு பதிலாக உங்கள் குடலியக்கத்திற்கு துணை புரியும் பழச்சாறு, ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுத்து பருகி வரலாம்.
- ஜீரணிக்க எளிதான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றின் வேலையை குறைப்பதால் எரிச்சல் குறைந்து விடும்.
- நார்ச்சத்துகள் உள்ள உணவுகள் உடலால் சீக்கிரம் உறிஞ்சப்பட்டு ஜீரணிக்கப்படுகிறது. எனவே கேரட், செலரி, சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், ரோல்டு ஓட்ஸ், பார்லி நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சைலியம் பவுடர் மற்றும் குளுட்டமைன் போன்ற மாத்திரை வடிவில் கூட நார்ச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முயலலாம்.
- வாயு உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அது உங்கள் குடலில் காற்று குமிழ்களை உருவாக்க வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு வயிற்றில் அசெளகரியத்தையும் எரிச்சலையும் உண்டாக்க கூடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது.
- வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர் ஆகியவற்றில் அதிக அளவு புளித்த சர்க்கரை உள்ளது, இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் தளமாக வயிற்றை அமைத்து விடுகிறது.
- எரிச்சல் குடல் நோய்க்குறி உள்ளவர்கள் புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளும் குடல் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது மற்றும் குடல் அமில சூழ்நிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது. சில நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- எரிச்சல் குடல் நோய்க்குறிக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா, சுவாச பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். இது உங்கள் மன அழுத்தத்தை போக்கி மலச்சிக்கலை போக்க உதவி செய்யும்.