இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் செல்லும் பேருந்தில் டோனி அமரும் இடம் எப்போதும் காலியாகவே இருப்பதாக சூழந்துவீச்சாளர் சஹால் உருக்குமாக பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலகளவில் பெரிதும் பேசப்படக்கூடிய நட்சத்திர வீரருமான டோனி, கடந்த ஆண்டு ஜூலை 9ம் திகதி நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டிக்கு பின், கிரிக்கெட் விளையாடவில்லை.
தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் டோனி, மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்குவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ஐபிஎல் டி20 போட்டியில் தோனி எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே அணியில் இடம்பிடிப்பார் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு டி20 தொடரில் வெற்றி பெற்றுவிட்டு 3-வது போட்டிக்காக ஹேமில்டன் சென்றுள்ளது.
அப்போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹால் பேருந்தில் இருந்த இந்திய அணி பலரையும் பேட்டி கண்டார்.
பேருந்தின் கடைசி வரிசையில் காலியாக இருந்த இருக்கை அருகே அமர்ந்துகொண்டு, “இந்த இருக்கை எப்போதும் அணியில் மிகப்பெரிய ஜாம்பவானுக்காக ஒதுக்கப்படும். அது வேறுயாருமில்லை தோனிதான் அந்த ஜாம்பவான். எந்த ஒரு பேருந்திலும் தோனிக்காக ஒதுக்கப்படும் கடைசி வரிசையில் ஜன்னல் ஓர இருக்கையில் இப்போது எந்த வீரர்களும் அமருவதில்லை. அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியை அதிகமாக மிஸ் செய்கிறோம்.” என உருக்கமாக பேசியுள்ளார்.