முகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நற்பெயரை எடுத்து இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தவர் தான் நடன மாஸ்டரான சாண்டி.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வின்னரான முகென் ராவ் தந்தை நேற்று மாரடைப்பால் காலமாகி உள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதைத்தொடர்ந்து, சாண்டியின் மனைவி சில்வியாவின் தந்தை திடீரென காலமானார். இந்த தகவல் பிக்பாஸ், அடுத்த ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, முகென் தந்தை இறப்பினால் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் சோகத்தில் உள்ள நிலையில், தற்போது சாண்டி வீட்டிலும் உள்ள ஒரு சோகம் அரங்கேறியுள்ள சம்பவம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.