மருமகள் செய்த தகாத காரியம்.. கத்தி ஊரை கூட்டிய மாமனார்.!!

கிராம மக்கள் அனைவருக்கு சேர்ந்து ஒரு கள்ளக்காதல் ஜோடியை கம்பம் ஒன்றில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து, மூக்கை அறுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியா மாவட்டத்திற்கு உட்பட்ட கந்த் பிப்ரா என்னும் கிராமத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் 30 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். அந்த 30 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த இளைஞர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளான். அந்த சமயத்தில், பெண்ணின் மாமனார் இதனை பார்த்து விடுகிறார்.

இதை தொடர்ந்து இந்த சம்பவம் அனைவர்க்கும் தெரிய வந்துள்ளது. பின்னர் பெண்ணின் உறவினர்கள், இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் ஆத்திரம் அடங்காத அவர்கள் இருவரின் மூக்கையும் அறுத்துள்ளனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் மாமனார் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர். முறையற்ற உறவில் இருந்த இளைஞர் மற்றும் பெண்ணின் மூக்கை அறுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.