ரகசிய தகவலால் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்ட சிறுமிகள்..!!

ராணிப்பேட்டையை அடுத்துள்ள அம்மூர் நரசிங்கபுரம் கிராமத்தில் பைரவா காலனியில் உள்ள 16, 17 வயதுடைய 3 சிறுமிகளுக்கு, குடுகுடுப்பைக்காரர்கள் இன்று காலையில் திருமணம் செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

பைரவா காலனி பகுதிகளில் குடும்பத்துடன் வாழும் குடுகுடுப்பைக்காரர்கள் அவர்களுது பெண் பிள்ளைகளுக்கு 13, 15 வயது நிறைந்ததுடன் திருமணம் செய்துவைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், குடுகுடுப்பைக்காரர்கள் நடத்தவிருந்த 3 சிறுமிகளின் திருமண ஏற்பாடு குறித்த ரகசியது சைல்டு லைன் எண்ணான, 1098-க்கு நேற்றிரவு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்த தகவல் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்ய தர்ஷினிக்கு சென்றது. இதை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில், சைல்டு லைன் களப்பணியாளர்கள் மற்றும் வாலாஜா சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து, காவல்துறை உதவியுடன் அம்மூர் நரசிங்கபுரத்திற்கு சென்று, சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உற்றாரிடமும் ஊர் பிரமுகர்களிடமும் பேசி, நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆனால், இந்த இதற்கு முற்றிலும் அந்த குடுகுடுப்பைக்காரர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இருந்த போதிலும், விடாமுயற்சியுடன் குழந்தைகளை மீட்ட அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழுவின் முன் ஆஜர்படுத்தி, வேலூர் அரசினர் பெண் குழந்தைகள் வரவேற்பு இல்லத்தில் தங்கவைத்துள்ளனர். இதுபற்றி பேசிய அதிகாரிகள், ‘இந்த சைல்டு லைன் ஹெல்ப்லைன் நம்பர் மூலம் பொதுமக்கள் போன் செய்து தகவல் தெரிவித்தால் இப்படி பல குழந்தைகள் திருமணங்களை தடுக்கலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.