இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி நாளொன்றுக்கு 91 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மக்களை பாதுகாக்க வேண்டிய பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரி புகார் கொடுக்க வந்த பெண் மற்றும் அவரது தாயாரை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் ஆந்திரபிரேதேசம் மாநிலத்தில் உள்ள அருண்டெல் பேட்டை காவல் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்ணொருவர் வந்துள்ளார். இவர் அளித்த புகாரில், தன்னை காதலிப்பதாக கூறிய வாலிபர் இப்போது ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனை ஏற்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணைக்காக தனது இல்லத்திற்கு வருமாறு பெண்ணை கூறியுள்ளார். இதனைப்போலவே, பெண்ணின் தாயாரை கான்ஸ்டபிள் ராமன் என்பவன் விசாரணை என்று விடுதிக்கு அழைத்து சென்றுள்ளான்.
இவர்களின் பேச்சை நம்பி சென்ற இருவரையும் காவல் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாய் மற்றும் மகளை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.